கம்பம், சின்னமனூர் நகராட்சியில் ‘‘புகையில்லா போகி’’

*வீடுதோறும் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்

கம்பம்/சின்னமனூர் : கம்பம் நகராட்சி பகுதியில் ‘‘புகையில்லா போகி’’ கொண்டாட பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் வீடுதோறும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்ககப்பட்டு வருகிறது.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கம்பம் நகராட்சியில் \\”புகையில்லா போகி\\” கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கம்பம் நகராட்சி சார்பில் நகராட்சிப்பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதில், எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகி அன்று தங்களிடமுள்ள பழைய டயர்கள், பாய், மெத்தை, தலையணைகள், துணிகள் மற்றும் தேவையில்லாத பொருள்களை பொது இடங்களில் கொட்டுவதும் எரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே குப்பைகளை தங்களது வீடு தேடி வரும் நகராட்சி வாகனங்களிலும், நகராட்சியால் அறிவிக்கப்பட்டள்ள இடங்களிலும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் கூறுகையில், கம்பம் நகராட்சி பகுதியில் ‘‘புகையில்லா போகி’’ கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடமுள்ள தேவையற்ற பழய பாய், தலையணை, மெத்தை உள்ளிட்ட பொருட்களை தெருக்களில் கொட்டி எரிப்பதை தடுக்கும்விதமாக, 1. கம்பம் மெட்டு ரோடு பொது சுகாதாரப்பிரிவு அலுவலகம் 3 அருகில், 2. புதிய பேருந்து நிலையம், 3. போலீஸ் குடியிருப்பு அருகில், 4. நாட்டுக்கல் பகுதி எனமேற்கண்ட நான்கு இடங்களில் இன்று (நேற்று) முதல் 14.01.2023 வரையுள்ள நாட்களில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மேற்குறிப்பிட்ட குப்பைகளை கொடுக்குமாறும், தூய்மையான காற்றுக்கு பொதுமக்கள் துணை நிற்குமாறும் கேட்டுகொள்ளப் படுகிறார்கள் என்றார்.

* சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, நகராட்சி கமிஷனர் கணேஷ் ஆகிய இருவரும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் கம்பம் நகராட்சி பகுதியில் ‘‘புகையில்லா போகி’’ கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடமுள்ள தேவையற்ற பழய பாய், தலையணை, மெத்தை உள்ளிட்ட பொருட்களை தெருக்களில் கொட்டி எரிப்பதை தடுக்கும்விதமாக, வண்டிப்பேட்டை, தங்கம் மைக் செட் அருகில், ராதா கிருஷ்ணன் ரைஸ்மில் தெரு, காளியம்மன் கோயில், பகவதி அம்மன் கோயில் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (நேற்று) முதல் 14.01.2023 வரையுள்ள நாட்களில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மேற்குறிப்பிட்ட குப்பைகளை கொடுக்குமாறும், தூய்மையான காற்றுக்கு பொதுமக்கள் துணை நிற்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள், என தெரிவித்துள்ளனர்.

Related Stories: