தெ.ஆ. டி.20 லீக் தொடர்: சூப்பர் கிங்ஸ் வெற்றி

டர்பன்: 6 அணிகள் பங்கேற்றுள்ள தென்ஆப்ரிக்கா டி.20 லீக் தொடரில் டர்பனில் நேற்று நடந்த 2வது போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்-டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ், 20 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டோனோவன் ஃபெரேரா 82 (40 பந்து), ரொமாரியோ ஷெப்பர்ட் 40 (19 பந்து) கேப்டன் டூபிளசிஸ் 39 ரன் அடித்தனர்.

பின்னர் களம் இறங்கிய சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களே எடுத்தது. இதனால் சூப்பர் கிங்ஸ் 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று இரவு 9 மணிக்கு சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories: