சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு, புதுச்சேரி அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சாலை விரிவாக்கத்துக்கு எதிரான வழக்கில் இந்திய சாலை மேம்பாட்டு கழகமும் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள பள்ளங்களால் அதிகளவில் விபத்துகள் நடப்பதாக ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஈசிஆர் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலை பாதிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
