திருச்செந்தூரில் பொங்கல் பண்டிகையையொட்டி பாத்திரங்கள் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி..!!

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொப்பரை அண்டா மற்றும் குத்துப்பாணி பாத்திரங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. பொங்கல் திருநாளில் புதுமணத் தம்பதிகளுக்கு பெண் வீட்டார் பித்தளை பாத்திரங்கள் குத்துவிளக்குகள் போன்றவை சீர்வரிசையாக வழங்குவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

தென்மாவட்டங்களில் கொப்பரை அண்டா மற்றும் குத்துப்பாணி பாத்திரங்களை பொங்கல் சீர்வரிசையாக கொடுக்க பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் கட்டி வருகின்றனர்.

பித்தளை ரூ.800,வெண்கல உருளி ரூ.900, செம்பு பானை ரூ.1200 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரம் தடைப்பட்டநிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பாத்திரங்கள் விற்பனை களைகட்டியுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Related Stories: