டெல்லி: சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி நடந்துகொண்ட விதம் பற்றி குடியரசுத் தலைவரிடம் கூறினோம் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்த பின்னர் திமுக எம்பி டி.ஆர்.பாலு டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். உரையில் உள்ள சில பத்திகளை ஆளுநர் ரவி தவிர்த்து பேசியது பற்றி குடியரசுத் தலைவரிடம் முறையீடு செய்தோம். மனுவை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி நான் பார்க்கிறேன் என்று தெரிவித்தார் எனவும் கூறினார்.