திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை: இன்றைக்கு குடமுழுக்கு தொடர்பான பத்திரிகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க தமிழிலேயே அச்சடிக்கப்படுகிறது என்றால் அதற்கு முழு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பழனி முருகன் கோயிலில் நூற்றுக்கும் அதிகமான ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வேத மந்திரங்கள் தமிழில் வாசிக்கப்படுகிறது என்றால் அதற்கும் காரணம் முதலமைச்சர் தான். பழநி குடமுழுக்கு விழாவில் தமிழ் மந்திரமும், ஆகம விதிப்படி வேதங்களும் ஓதப்படும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: