×

ஈரோடு கொண்டத்து காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா: குண்டம் இறங்கி அம்மனை வழிபட்ட பக்தர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பாரியூரில் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படும் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.

 40அடி நீல குண்டத்தில் தலைமை பூசாரி முதலில் இறங்கி தொடங்கி வைத்ததும். ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவது மனநிறைவு அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். நாளை தேரோட்டமும்  நாளை மறுதினம் மலர் பல்லக்கு ஊர்வலமும் நடைபெற உள்ளது.


Tags : Gundam festival ,Kallyamman Temple ,Erod ,Kundam ,Amman , Erode, Gundam festival, devotees worshiping the Goddess
× RELATED ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன்...