×

பொங்கல் பண்டிகையையொட்டி குமரி அருகே 2 ஏக்கரில் பூத்துக் குலுங்கும் மலர்கள்: பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்று வட்டாரங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி அடுத்த ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சுமார் 2000 ஏக்கரில் பிச்சி, மல்லிகை, கேந்தி, கோழிக்கொண்டை பூ, அரளி, துளசி என பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தற்போது பூந்தோட்டங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணியில் பூ விவசாயிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. பூ பறிக்கும் தொழிலாளர்கள் மாற்று வேலைக்கு சென்று விட்டதால் பூக்களை பறிக்க ஆள் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் கோரியுள்ளனர்.


Tags : Pongal feast Kumari , Pongal, Kumari, Flower, Price, Farmer, Happiness
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!