சென்னை: சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாகனங்களில் ஏறுவது கட் அவுட்டுக்கள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தான செயல்கள். இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும் என துணிவு ரிலீஸ் கொண்டாட்டத்தில் இளைஞர் இறந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
