×

நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் இருமல் மருந்தை பயன்படுத்த கூடாது: உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் இறந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நொய்டாவில் செயல்படும் மேரியன் பயோடெக் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான டோக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டி உள்ளது.

இதனைத் தொடர்ந்து மேரியன் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் என்ற இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு பரிசோதித்தது. இதில், இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மருந்துகளும் குழந்தைகள் பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் பயன்பாட்டைக் கைவிடுமாறும் அந்த அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது. உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் இறந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இருமல் மருந்துகளில் குறைபாடு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags : Marian Biotech ,World Health Organisation , Noida-based Marian Biotech's cough medicine should not be used: World Health Organisation
× RELATED ஓமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள...