தமிழகத்தில் இருந்து ஆளுநரை வெளியேற்ற போராட்டம்: எஸ்டிபிஐ அறிவிப்பு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசையும், அரசை தேர்ந்தெடுத்த தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார்.  தமிழ்நாட்டின் கொள்கைக்கும், தமிழர் நலனுக்கும் விரோதமாகவும் செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஆளுநரின் தொடரும் அரசியலைமைப்பு விரோத போக்கை கண்டித்தும், ஆளுநரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற கோரியும் எஸ்.டி.பி.ஐ.கட்சி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: