பள்ளத்தாக்கில் விழுந்து 3 ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மச்சால் செக்டாரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரோந்து பணியில் இருந்த ராணுவ வீரர்கள் தவறி அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்தனர். இதில் அவர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். சக வீரர்கள் கொடுத்த தகவலின்பேரில் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டது.

Related Stories: