×

அடிலெய்டு டென்னிஸ் காலிறுதியில் படோசா

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் (2) தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எஸ்டோனியாவின் கயா கானெபியுடன் (37 வயது, 32வது ரேங்க்) நேற்று மோதிய படோசா (25 வயது, 11வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை மிக எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

2வது செட்டில் கானெபி கடும் நெருக்கடி கொடுத்தாலும், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த படோசா 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 23 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் பெத்ரா குவித்தோவா (செக் குடியரசு), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்), வெரோனிகா குதெர்மதோவா (ரஷ்யா), ஹடாட் மயா (பிரேசில்), டாரியா கசட்கினா (ரஷ்யா), டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா)  ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.



Tags : Padosa ,Adelaide , Adelaide, Tennis, Quarter-Final, Padosa
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் ஹாலெப்பை வீழ்த்தினார் படோசா