கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது சிசுவுடன் மனைவி சாவு: போலீசில் கணவர் புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா எம்.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (26). இவரது மனைவி சினேகா (21). 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 2வது முறையாக சினேகா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 9ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் சினேகாவுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, பிரசவத்துக்கு முன்பே உயிரிழந்துள்ளார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இதில் சந்தேகம் உள்ளதால் இறப்பு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வகுமார் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: