ஜம்மு - காஷ்மீரில் மலைச்சரிவில் தவறி விழுந்து 3 ராணுவ வீரர்கள் மரணம்

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் மலைச்சரிவில் தவறி விழுந்து 3 வீரர்கள் மரணமடைந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மச்சால் செக்டரில் உள்ள மலைப் பகுதியில் சினார் கார்ப்ஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில்  மூன்று ராணுவ வீரர்கள் திடீரென மலைப்பகுதியின் சரிவில் தவறி விழுந்தனர்.

எதிர்பாராத விதமாக அவர்கள் மூன்று பேரும் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கி இறந்த மூன்று ராணுவ வீரர்களின் சடலங்களையும் மீட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மச்சல் செக்டாரில் வீரர்கள் ரோந்து சென்ற போது ஜேசிஓ ஒருவர், 2 ஓஆர் என மூன்று பேர் தவறி விழுந்து இறந்தனர்’ என்றனர்.

Related Stories: