×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆத்தூரில் விசாரணை

ஆத்தூர்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆத்தூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில் ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் இன்னொரு காவலாளி கிருஷ்ணதபா காயமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவரான சேலம் மாவட்டம் இடைப்பாடி சமுத்திரம் சித்திரைபாளையத்தை சேர்ந்த கனகராஜ், ஆத்தூரில் 2017 ஏப்ரல் 28ம் தேதி மர்மமான முறையில் வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு பல மர்ம முடிச்சுகளுடன் தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட இன்னும் வழக்கு முடிவுக்கு வரவில்லை. இதனால் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சிபிசிஐடி போலீசார், எஸ்டேட் மேலாளர் நடராஜ், காசாளர் மற்றும் கணக்கீட்டாளர்களிடம் விசாரணை நடத்தினர். சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதுவரையில் 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று ஆத்தூரில் விசாரணை நடத்தினர். 2 வாகனங்களில் வந்த குழுவினர், கனகராஜ் விபத்தில் சிக்கிய ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை சந்தனகிரி பிரிவு ரோடு பகுதியில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள கடைக்காரரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Kodanadu ,Special Investigation Committee ,Aathur , Kodanad murder, robbery case; Investigation by Special Investigation Team at Attur
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...