×

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

நாகை: மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரு மாநில அரசின் அச்சடிக்கப்பட்ட உரையை, உள்ளது உள்ளப்படியே வாசிப்பது தான் ஆளுநர் உரையின் மரபாகும். தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையில் அது மீறப்பட்டிருக்கிறது. அச்சடிக்கப்பட்ட வாசகங்களை தவிர்த்திருப்பதோடு, அச்சடிக்கப்படாத வாசகங்களை அவர் பயன்படுத்தியிருப்பதும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.

ஆளுநரின் வரம்பு மீறிய செயலாகும். இது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகும். சட்டசபையில் அவரது நடவடிக்கைகள் அதை உறுதி செய்திருக்கிறது. ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

Tags : Governor ,Tamimun Ansari ,Union Government , Governor must be recalled: Tamimun Ansari urges Union Government
× RELATED நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்