×

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123க்குட்பட்ட ஆழ்வார்பேட்டை, புனித மேரி சாலையில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் 2021-22ஆம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.36 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (10.01.2023)  திறந்து வைத்தார்.

இக்கட்டடம் 94.2 ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் உடற்பயிற்சி சாதனங்கள், உடற்பயிற்சிக் கூடம், கழிப்பிட வசதி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் .த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், மத்திய வட்டார துணை ஆணையாளர் (பொ) எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் மோ.சரஸ்வதி மற்றும் மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Udhayanidhi Stalin , Mylapore, Constituency Development Fund, Minister Udayanidhi Stalin
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்