சென்னை: தமிழ்நாடு நாடார் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளரும் சமத்துவ மக்கள் கழக தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக வாசிக்கவேண்டும் என்பது ஆளுநரின் கடமையும், பொறுப்புமாகும். திராவிட மாடல் என்ற வார்த்தையும், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் பெயர்களையும் படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான செயல்படும் கவர்னரை கண்டித்து வரும் 12ம்தேதி மதியம் 3 மணி அளவில் ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதில், நாடார் பேரவை பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ராம், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், வடசென்னை நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், தட்சிணாமாறா, நாடார் சங்க சென்னை இயக்குனர் என்.ஏ.தங்கதுரை, ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், திருவொற்றியூர் பகுதி செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கருப்பையா, பாக்கியராஜ், சுப்பிரமணி, வெள்ளைச்சாமி, சேவியர், சிவக்குமார், பத்மநாபன், ஸ்டாலின், மகளிரணி நிர்வாகிகள் குணசுந்தரி, மீனா, ஆனந்தி, அனிதா மற்றும் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
