ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் எதிர்தாக்குதல்கள் நடத்தும் விதமாக எல்லையோர கிராம மக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரஜவுரி மாவட்டத்தின் டாங்கிரி கிராமத்தில் அண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க பாதுகாப்பு படையினருக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது.