மும்பையில் உள்ள அம்பானி பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை..!

மும்பை: மும்பையில் உள்ள அம்பானி பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் பாந்த்ரா குர்லா வளாகத்தில், திருபாய் அம்பானி தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுக்கு மர்ம போன் கால் வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி அழைப்பை துண்டித்தார். அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் பள்ளியை சோதனையிட்டனர். முடிவில் வெடிகுண்டு தொடர்பான எந்த தடயங்களும் இல்லை என்பது தெரியவந்தது. அதையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது ஐபிசியின் 505 (1) (பி) மற்றும் 506-ன் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில், எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் போன் அழைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: