×

சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை

*சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள்

*இ.எஸ்.ஐ அலுவலகத்தை கீழே மாற்ற கோரிக்கை

சிவகாசி  சிவகாசியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில், மருத்துவர்கள் பற்றாக்குறயைால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். மேலும், மருத்துவமனையில் உள்ள சி.எஸ்.ஐ அலுவலகம் மாடியில் உள்ளதால், பெரியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏறிச் செல்ல அவதிப்படுகின்றனர். இதனால், அலுவலகத்தை தரைத்தளத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி மாநகராட்சியில் உள்ள சாட்சியாபுரத்தில், இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் மற்றும் அச்சகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் பணியிடம் உள்ளது. தினசரி காலை 7 மணி முதல் 10.30 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இங்கு போதிய டாக்டர்கள் பணி நியமிக்கப்படவில்லை. இதனால், சிகிச்சை பெற வரும் தொழிலாளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய அவலநிலை உள்ளது. அதேபோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் தொழிலாளர்களுக்கு சேவை செய்ய போதிய மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

இதனால், நடக்க முடியாத நிலையில் வரும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். மருத்துவ அலுவலர்கள் பற்றாக்குறையால் சிகிச்கை பெற வரும் நோயாளிகளின் தங்களது மருத்துவ பதிவு அட்டையை பெற நீண்டநேரம் காத்திருந்து பெற்றுச்  செல்ல வேண்டியுள்ளது. அதன்பின் டாக்டரிடம் சிகிச்சை பெற்று மருந்து வாங்க செல்லும் நோயாளிகள் மருந்து, மாத்திரை வாங்க காத்திருக்கின்றனர்.

மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் தொழிலாளர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தினமும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை பெறமுடியாத நிலை உள்ளது. மேல் சிகிச்சை பெற வேண்டிய தொழிலாளர்கள் மட்டும் ரிசர்வ்லைனில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மாடியில் இ.எஸ்.ஐ அலுவலகம்:

நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், அவர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு ஓய்வூதியம், விடுமுறைச் சம்பளம் ஆகிய பணப்பலன் வழங்கும் அலுவலகமும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் மாடியில் இருப்பதால் ஊனமுற்றோர், விபத்தில் கை, கால் இழந்தவர்கள் மாடியில் ஏறி, இறங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோல் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இங்குள்ள அலுவலகத்தில் லைப் சர்டிபிகேட் படிவத்தில் டாக்டர்களிடம் கையெழுத்து பெற்று வழங்க வேண்டும். இவர்களில் பலர் வயது முதிந்தவர்களாகவும், நடக்க முடியாதவர்களாகவும் உள்ளனர்.

அலுவலகம் மாடியில் செயல்பட்டு வருவதால் இவர்களை தூக்கி செல்லும் அவலம் உள்ளது. எனவே, லைப் சர்டிபிகேட் படிவம் ஆன்லைன் ைலன் மூலம் சமர்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க, ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசியில் இயங்கி வரும் இஎஸ்ஐ அலுவலகத்திற்கு பெரும்பாலான நோயாளிகள், முதியவர்களே அதிகம் வருகின்றனர்.
 எனவே, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தேவையான மருத்துவர்களை நியமித்து நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவும், இ.எஸ்.ஐ அலுவலகத்ைத தரைத்தளத்திற்கு மாற்றவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,ESI Hospital , Sivakasi At ESI Hospital in Sivakasi, due to shortage of doctors, patients are waiting for treatment for a long time
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து