×

கடுக்காய் தொழிற்சாலை அமைக்க 'கடுக்கா'கொடுக்காமல் அரசு பரிசீலிக்கும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

சென்னை: சங்கராபுரம் தொகுதியில் கடுங்காய் தொழிற்சாலை அமைக்க கடுக்கா கொடுக்காமல் அரசு பரிசீலிக்கும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். கேள்வி நேரத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், சட்டப்பேரவையில் சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அப்போது, கல்வராயன் மலைப்பகுதியில் கடுக்காய் விளைச்சல் அதிகமாக உள்ளதால் கடுக்காய் தொழிற்சாலை அமைக்க உதயசூரியன் கோரிக்கை விடுத்தார்.

மருத்துவ குணமும், சாயம் பதிக்கவும் கடுக்காய் மிகவும் பயன்படுவதால் கடுக்காய் தொழிற்சாலை தேவை எனவும் உதயசூரியன் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடுக்காய் தொழிற்சாலை அமைக்க கடுக்கா கொடுக்காமல் அரசு பரிசீலிக்கும் என கூறியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. சங்கராபுரம் தொகுதியில் கடுங்காய் தொழிற்சாலை அமைக்க கடுக்கா கொடுக்காமல் அரசு பரிசீலிக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.


Tags : Govt ,Minister , Mustard Factory, Review, Assembly, Minister Gold South
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...