×

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் சட்டப்பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்ய முடிவு

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் சட்டப்பேரவை வருத்தத்தை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.ராமகிருஷ்ணன் முன் மொழிகிறார்.

கடந்த திங்கள் கிழமை சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ஆற்றிய உரையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. தொடர்ச்சியாக அன்றையதினம் ஆளுநர் உரைக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன் மொழிந்து ஆளுநர் உரையில் கூடுதலாக பேசிய வார்த்தைகள் நீக்கப்படுவதாக அறிவித்தார். பேரவை அனுமதியுடன் அந்த தீர்மானமானது முழுமையாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து அரசியல் சார்ந்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் சட்டப்பேரவை கூடியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா-வுக்கு இரங்கல் தெரிவித்தும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 3-ம் நாளான இன்று ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ளனர்.

இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தொடங்கிவைத்து கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.ராமகிருஷ்ணன் முன் மொழிகிறார். அந்த தீர்மானத்தில் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு, ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு இப்பேரவை வருத்தத்தை பதிவு செய்வதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல பேரவையின் மாண்பினைப் போற்றிடும் வகையில் வகையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ம் நாள் பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநரின் பேருரைக்கு இப்பேரவை உறுப்பினர்கள் நன்றியுடையவர்களாவர் என்று நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.  நா.ராமகிருஷ்ணன் முன்மொழிந்தார்.


Tags : Governor , Resolution of thanks for Governor's speech, Legislative Assembly, resolution to register regret
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...