×

120 பெண்கள் பலாத்காரம் லேபி பாபாவுக்கு 14 ஆண்டு சிறை

பதேஹாபாத்: அரியானாவில் 120 பெண்களை பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்த ஜிலேபி பாபா என்ற சாமியாருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரியானாவின் தோகானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா. வயது 63.   சாமியாராக மாறுவதற்கு முன்பு, தோகானாவின் ரயில்வே சாலை பகுதியில் ஜிலேபி விற்று வந்ததால், அவரை அனைவரும் ஜிலேபி பாபா என்றழைத்தனர். அவரால் பல பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெண்கள் கொடுத்த புகாரை அடுத்து ஜிலேபி பாபாவை போலீசார் கைது செய்தனர்.  அவாிடம் தோகானா போலீசார் நடத்திய சோதனையில் பல ஆபாச வீடியோக்கள் சிக்கின. ஜிலேபி பாபா ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்கு முன்பு அவருக்கு போதை வஸ்துகளை கொடுத்து சுய நினைவை இழக்க செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதே போல் அவர் 120 பெண்களை பலாத்காரம் செய்து, அதை ஆபாச வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பான வழக்கு அரியானா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜிலேபி பாபாவை குற்றவாளி என்று அறிவித்தது. நேற்று அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்சோ வழக்கில் அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.



Tags : Laby Baba , Laby Baba gets 14 years in jail for raping 120 women
× RELATED புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான...