பஞ்சாப்பில் இன்று ஒற்றுமை பயணம் ற்கோயிலில் ராகுல் வழிபாடு

சண்டிகர்: பஞ்சாபில் இந்திய ஒற்றுமை பயணத்தை இன்று தொடங்கவுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அமிர்தசரஸ் பொற்கோயிலில் நேற்று வழிபாடு நடத்தினார். த்தரப்பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த வியாழனன்று அரியானாவின் பானிப்பட்டில் நுழைந்தது.  அரியானாவில் ஒற்றுமை பயணம் அம்பாலா மாவட்டத்தில் நேற்று முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நேற்று பிற்பகல் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தனர்.

இன்று காலை முதல் பஞ்சாப் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரையை ராகுல் தொடங்க உள்ளார். முன்னதாக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலமான  பொற்கோயிலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று வழிபாடு நடத்தினார்.  அதன் பின் அவர் பஞ்சாபில் உள்ள படேகர் சாகிப்பில் உள்ள சர்ஹிந்த்துக்கு திரும்பினார்.

Related Stories: