×

குத்தகைதாரர்களிடமிருந்து 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் நிலத்தை திரும்ப பெற வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: அறநிலையத்துறையில், பதிவுபெற்ற குத்தகைதாரர்களிடமிருந்து, 5 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
அறநிலையத்துறையின் நிலங்களை குத்தகைக்கு எடுத்த பதிவு பெற்ற குத்தகைதாரர்கள் பலர் இறந்து உள்ளனர். எனவே, தற்போதைய அனுபவதாரர்கள் சட்ட விதிகளின் படி குத்தகை உரிமை இல்லாதவர்கள்.

இவர்களுக்கு முன் உழவடை செய்தோர் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தற்போதைய அனுபவ தாரர்கள் வழங்கிட முன் வருவதில்லை. இதனால் கோயிலுக்கு வரவேண்டிய வருவாயினை இழக்க நேரிடுகிறது.  எனவே அறநிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களின் நலன் கருதியும் மற்றும் வருவாயினை பெருக்கிட ஏதுவாக உரிமைகள் பதிவுறு சட்டத்தின் கீழ் குத்தகை உரிமம் பெற்று அறநிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களை அனுபவித்து வரும் குத்தகை தாரர்கள் வசம் உள்ள 5 ஏக்கருக்கு (நிர்ணயிக்கப்பட்ட ஏக்கருக்கு) மேல் உள்ள நிலங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Tags : Kumaragurupara , Land held above 5 acres to be recovered from tenants: Endowment Commissioner Kumaragurupara orders
× RELATED பள்ளிகளில் ஆய்வக செயல்பாடுகளை...