சந்தேகங்களுக்கு தீர்வு காண மண்டல பாஸ்போர்ட் அலுவலரை சந்தியுங்கள்: புதிய முயற்சியில் ஆர்பிஓ அலுவலகம்

சென்னை: பாஸ்போர்ட் எடுப்பதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் உங்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலரை சந்தியுங்கள் என்ற புதிய முயற்சியை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மேற்கொண்டுள்ளது. புத்தாண்டு 2023ம் ஆண்டை ஒட்டி சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ஓர் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதன்படி சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் தொடர்பான குறைகளை விரைவாகத் தீர்க்கும் வகையில் மீட் யுவர் ஆர்பிஓ அதாவது உங்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலரை சந்தியுங்கள் என்ற புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் 12 மணி முதல் 1 மணி வரை சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் ஐ.எப்.எஸ். மற்றும் மூத்த அதிகாரிகளை எந்த முன் சந்திப்பும் இல்லாமல் நேரடியாக சந்திகலாம். இதற்கு முன்தாக 73053 30666 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு குறைகள் தொடர்பாக தகவல்களை தெரிவிக்கவேண்டும். இதன் மூலம் ஏற்கனவே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அதை பெறுவதில் குறைகள் உள்ளவர்கள், பாஸ்போர்ட் எடுப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் முதல் கூட்டமானது நேற்று நடைபெற்றது. மேலும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: