திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் நேர்காணல்: மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவிப்பு

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் வருகிற 19, 20ம் தேதிகளில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவித்துள்ளார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் வருகிற 19ம் தேதி(வியாழக்கிழமை) மற்றும் 20ம் தேதி(வெள்ளி) ஆகிய நாட்களில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். 19ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருவாரூர், திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, நாகை தெற்கு, நாகை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, தஞ்சை வடக்கு, கடலூர் மேற்கு, கடலூர் கிழக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் வடக்கு, வேலூர் மேற்கு (திருப்பத்தூர்), வேலூர் மத்திய, வேலூர் கிழக்கு(ராணிப்பேட்டை) மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும்.

பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு, மதுரை வடக்கு, நிலகிரி மாவட்டம், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை வடக்கு மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும். 20ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கன்னியாகுமரி மேற்கு, கன்னியாகுமரி கிழக்கு, தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தென்காசி தெற்கு, தென்காசி வடக்கு, திருநெல்வேலி மத்திய, திருநெல்வேலி கிழக்கு, விருதுநகர் தெற்கு, விருதுநகர் வடக்கு, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி தெற்கு, தேனி வடக்கு மாவட்டத்துக்கான நேர்காணல் நடைபெறும்.

பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, நாமக்கல் மேற்கு, நாமக்கல் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, புதுக்கோட்டை தெற்கு,  புதுக்கோட்டை வடக்கு, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக கிடைக்கப்பெற்றுள்ள நேர்காணல் அழைப்பு கடிதத்துடன், குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்னதாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: