சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவருமான செல்வப்பெருந்தகை அக்கா மனோகரி அம்மாள் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘‘திருப்பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவருமான செல்வப்பெருந்தகை அக்காள் மனோகரி அம்மாள் இயற்கை எய்தினார் என்று அறிந்து வருந்தினேன். உடன் பிறந்த உயிருக்குயிரான அக்காவை இழந்து தவிக்கும் செல்வப்பெருந்தகைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
