×

அடிலெய்டு டென்னிஸ்: வெரோனிகா அசத்தல்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் (2) தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மதோவா தகுதி பெற்றார்.
பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரெங்காவுடன் (33 வயது, 25வது ரேங்க்) நேற்று மோதிய வெரோனிகா (25 வயது, 9வது ரேங்க்) 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் இரு வீராங்கனைகளும் விடாப்பிடியாக போராட, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் சிறப்பாக செயல்பட்ட வெரோனிகா 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. கடைசி செட்டில் அசரெங்காவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த அவர் 2-6, 7-6 (7-4), 6-4 என்ற கணக்கில் 2 மணி, 58 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனைகள் அமெண்டா அனிசிமோவா (அமெரிக்கா), பார்போரா கிரெஜ்சிகோவா, கேதரினா சினியகோவா (செக் குடியரசு), கயா கானெபி (எஸ்டோனியா), அன்னா கலின்ஸ்கயா (ரஷ்யா) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Veronica , Adelaide Tennis: Veronica is fantastic
× RELATED பான் பசிபிக் ஓபன் வெரோனிகா சாம்பியன்