ஹஜ் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

துபாய்: ஹஜ் புனித யாத்திரைக்கு கடந்த 2019ம் ஆண்டில் 24 லட்சம் பேர் வந்திருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளினால் கடந்த 2020ல் துபாயை சேர்ந்த 1,000 பேர், கடந்தாண்டு 6,000 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், துறைமுக நகரான ஜெட்டாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுதி ஹஜ் மற்றும் உம்ரா துறை அமைச்சர் தபீக் பின் பவ்ஜான் அல் ரபியா, ``கொரோனாவுக்கு முன்புபோல், ஹஜ் யாத்திரைக்கு வயது, எண்ணிக்கை வேறுபாடின்றி யாத்ரீகர்கள் வரலாம். ஒரு நாட்டில் இருந்து எத்தனை யாத்ரீகர்களை அழைத்து வருவது என்பது, உலகம் முழுவதிலும் ஹஜ் யாத்திரைக்கு உரிமம் பெற்றுள்ள அமைப்புகளிடமே விடப்படுறது,’’ என்று தெரிவித்தார். இதனால் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு அதிகளவிலான முஸ்லிம்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: