×

கேரளாவை சேர்ந்தவர் கனடா மாகாண பிரதமராகும் ரஞ்ச் பிள்ளை

டொராண்டோ: கனடாவின் யூகோன் பிரதேசத்தின் 10வது பிரதமராக கேரளாவை சேர்ந்த  அமைச்சர் ரஞ்ச் பிள்ளை ஜனவரி 14ம் தேதி பதவியேற்க உள்ளார். கேரளாவை சேர்ந்தவர் ரஞ்ச் பிள்ளை. இவர் கனடாவில் உள்ள யூகோன் லிபரல் கட்சியின் தலைவராக கடந்த ஜன.8ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து யூகோன் பகுதி பிரதமராக ஜன.14ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதுபற்றி ரஞ்ச் பிள்ளை வெளியிட்டுள்ள டிவிட்டில்,’ யூகோன் லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் நான் பெருமையும் பணிவும் அடைகிறேன். நாங்கள் பெருமைப்படுவதற்கு நிறைய இருக்கிறது.

மேலும் யூகோனின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து வரும் 14ம் தேதி பிற்பகல் ஜிம் ஸ்மித் கட்டிடத்தில் நடைபெறும் பொது விழாவில் ரஞ்ச் பிள்ளையும் அவரது அமைச்சரவையும் பதவியேற்பார்கள் என்று யூகோன் அரசின் நிர்வாகக் குழு அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் கனடாவில் உள்ள கொலம்பியா மாகாணத்தில்  இந்தியாவை சேர்ந்த உஜ்ஜல் டோசன் பிரதமராக பதவி ஏற்றார். அதை தொடர்ந்து ரஞ்ச் பிள்ளை கனடாவில் உள்ள இன்னொரு மாகாணத்தின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

Tags : Ranj Pillai ,Canada ,Kerala , Ranj Pillai, the Prime Minister of Canada, hails from Kerala
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்