×

 இங்கிலாந்து நாட்டின் சார்பில் போயிங் விமானம் மூலம் ராக்கெட் ஏவும் முதல் முயற்சி தோல்வி: விஞ்ஞானிகள் ஏமாற்றம்

லண்டன்: விண்ணில் ராக்கெட் ஏவும் இங்கிலாந்து நாட்டின் முதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இங்கிலாந்து இதுவரை ராக்கெட் ஏவும் பணியில் இறங்கவில்லை. வெளிநாடுகள் வாயிலாக தான் தேவையான செயற்கைகோளை விண்ணில் நிலைநிறுத்தி வந்தது. முதல் முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது. விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர லாஞ்சர் ஒன் ராக்கெட்டை பொருத்தி அதில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்தது. அதன்பின் போயிங் விமானத்தில் 9 செயற்கை கோள்கள் பொருத்தப்பட்ட ராக்கெட் இணைக்கப்பட்டது.

பின்னர் இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் ராக்கெட் வைக்கப்பட்ட விமானம் புறப்பட்டது. பின்னர் திட்டமிட்டபடி அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் ரெுங்கடலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் 9 செயற்கை கோள்களை சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தவில்லை. இதனால் இங்கிலாந்தின் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியில் முடிந்தது. முதல்முயற்சியே தோல்வியில் முடிந்ததால் விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். இப்பணி வெற்றிகரமாக முடிந்திருந்தால் பூமியின் சுற்றுப்பாதையில் ராக்கெட் அனுப்பும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருந்திருக்கும்.

Tags : Boeing ,UK , The first attempt to launch a rocket by a Boeing plane on behalf of the UK failed: scientists are disappointed
× RELATED போயிங் ஜெட் விமானம் புறப்படும்போது...