×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் கொதிகலன் பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது நிலையில் உள்ள 2 அலகுகளிலும் மீண்டும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதில்,  கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : North Chennai Thermal Power Station , 1200 MW power generation affected at North Chennai Thermal Power Station
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு