×

பொங்கல் பண்டிகை எதிரொலி சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் பயணிப்பது எப்படி? கார், பைக் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுரை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் 6 வெவ்வேறு இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வது எப்படி என்பது குறித்து போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்வார்கள். இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக வரும் 18ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்பேரில், சென்னையில் 6 வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

எனவே, பேருந்துகள் அனைத்து பயணிகளும் 6 இடங்களில் பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு, அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிறப்பு இயக்க பேருந்து நிலையங்களுக்கு பயணிக்க  மாநகர போக்குவரத்து கழகம்  சிறப்பு இணைப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் ஆம்னி பேருந்துகள் பின்வரும் வழித்தடங்களில் செல்லும், கோயம்பேட்டில் இருந்து அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளும் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல பூந்தமல்லி சாலை, வெளிவட்டச் சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்குச் செல்லும்.

வழக்கம்போல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடையும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது. இதேபோல் கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடைய வேண்டும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது. கிழக்கு கடற்கரை சாலை நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திப்பாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை வழியாக போக்குவரத்து காவல்துறையின் ஒப்புதலுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும்.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும். அனைத்து பயணிகளும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக வரும் 18ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

* ஆம்னிகளுக்கு கட்டுப்பாடு
ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, பூந்தமல்லி சாலை, சிஎம்ஆர்எல், ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் ஆகிய இடங்களில்  ஏறும் இடங்களை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்திலிருந்து ஏற்றிச் செல்லலாம்.

Tags : Pongal festival ,Chennai , Pongal festival reverberation How people can travel without traffic jam in Chennai? Police advice to car and bike drivers
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...