நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம்: இ.எஸ்.ஐ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று இ.எஸ்.ஐ  நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இ.எஸ்.ஐ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் தொழிலாளிகள், தொழில் முனைவோர் மற்றும் பயனாளிகளுக்காக பிரதி மாதம் 2வது புதன்கிழமை மண்டல அலுவலகத்திலும், 2வது வெள்ளிக்கிழமை அனைத்து கிளை அலுவலகங்களிலும் குறைதீர்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு, இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன், மண்டல அலுவலகத்தில் நடக்கிறது. எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு குறைகளுக்கான தீர்வை பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: