குடை மிளகாய் விலை வீழ்ச்சி: வறுமை மழையில் நனையும் விவசாயிகள்.. தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்..!!

கிருஷ்ணகிரி: குடைமிளகாய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் ஓசூர் சுற்றுவட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் . கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலூர், பேரிகை ஆகிய இடங்களில் 600 ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து குடைமிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு விளைவிக்கப்படும் குடைமிளகாய்கள் மும்பை, டெல்லி, குஜராத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் ஓசூர் சந்தையில் குடைமிளகாய் விலை கடுமையாக வீழ்ச்சியடைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் குடைமிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். வெளிமாநில வியாபாரிகளின் வருகை குறைந்து போனதால் உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். குடைமிளகாய் சாகுபடியால் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: