பதவிகளை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு: இ.பி.எஸ். தரப்பு வாதம்

டெல்லி: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என பொதுக்குழு தொடர்பாக வழக்கில் இ.பி.எஸ். தரப்பு வாதிட்டது. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல் பொதுக்குழு எடுத்த முடிவுகளை குறித்து மட்டும் கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும்  அதிமுக கட்சி  விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால் தான் எனவும் வாதிட்டார்.

Related Stories: