×

போர்ச்சுகல் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரொபர்ட்டோ மார்ட்டினஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி, காலிறுதியில் எதிர்பாராதவிதமாக மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும், இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

இந்நிலையில் தற்போது ஸ்பெயினை சேர்ந்த ரொபர்ட்டோ மார்ட்டினஸ், போர்ச்சுகல் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெல்ஜியம் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் ரொபர்ட்டோ மார்ட்டினஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘கிறிஸ்டியானோ ரொனால்டோ மிகச் சிறந்த வீரர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். போர்ச்சுகல் அணியில் அவரது எதிர்காலம் குறித்து, அவருடன் அமர்ந்து பேசவுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Portugal football , New coach appointed for Portugal football team
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்