×

கவுதிமாலா நாட்டில் அமோக விளைச்சல் இந்திய ஏலக்காய் ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம்-விவசாயிகள், வியாபாரிகள் கவலை

போடி : கவுதிமாலா நாட்டில் இருந்து அதிக அளவில் ஏலக்காய் கொள்முதல் செய்ய சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் ஆர்டர் கொடுத்துள்ளன. இதன் காரணமாக இந்திய ஏலக்காய் ஏற்றுமதியில் சறுக்கல் ஏற்படும் என்பதால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழக, கேரள எல்லையில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எஸ்டேட்களில் இருப்பவர்கள் வருடத்தில் 8 மாதம் வரை கடுமையாக உழைத்து குளிரிலும், மழையிலும், வெயிலிலும், காற்றிலும் இருந்து ஏலக்காய்களை காப்பாற்றி, அவற்றின் உற்பத்தியை அதிகரித்து வருகின்றனர்.

இவர்கள் உற்பத்தி செய்யும் ஏலக்காய்கள் இந்திய நறுமண வாரியத்தின் வாயிலாக இயங்கும் கேரள மாநிலம் புத்தடியிலும், தேனி மாவட்டம் போடியிலும் உள்ள ஏல மையத்திற்கு கொண்டு வரப்பட்டு இ சேவையின் மூலமாக ஏலம் கேட்கப்படுகிறது. இந்த ஏலத்தில் நிர்ணயிக்கப்படும் விலையே உலக அரங்கிலும் எதிரொலிக்கிறது.

விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் அதிகளவில் ஏலக்காய்களை கொள்முதல் செய்து நறுமண வாரியத்தில் பண பரிவர்த்தனை செய்கின்றனர். மேலும் அவற்றை தரம் பிரித்து ஏற்றுமதி குவாலிட்டி என சொல்லப்படும் எட்டுப்பருவட்டு ஏலக்காய், டன் கணக்கில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் ஏலக்காய்கள் மனம், மரு தேனியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள். த்துவ குணம் கொண்டவையாக இருக்கிறது. இதனால் வெளிநாடுகளில் கடுமையாக பொழியும் பனியினால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகளை சமாளித்து உஷ்ணத்தை அதிகரித்துக்கொள்ள பெரிதும் உதவுவதால் இந்திய ஏலக்காய்க்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது.

இதற்கிடையே மத்திய அமெரிக்க நாடான கவுதிமாலாவில், இந்திய தரத்துடன் ஒப்பிடும் நிலையில் அதிக மணம், மருத்துவ குணம், காரம் இல்லாத ஏலக்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.இதன்படி அதிகம் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுவதால் அவை இந்திய ஏலக்காய்க்கு நிகராக இல்லாமல் போனாலும் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எனவே இந்திய ஏற்றுமதியின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. பல ஆண்டுகளாக உலக அளவில் ஏலக்காய் ஏற்றுமதியில் கவுதிமாலா நாடுதான் முன்னணியில் உள்ளது. உதாரணமாக 2019ல் அந்நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கு சுமார் 38 கோடி டன் ஏலக்காய் ஏற்றுமதியாகி உள்ளது. இந்தியாவில் இருந்து 3,742 டன் மட்டுமே ஏற்றுமதியாகி உள்ளது.இதுபோன்ற நிலை தொடர்வதுடன் தற்போது அந்நாடு ஏற்றுமதியை மேலும பலமடங்கு அதிகரித்துள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவில் விளையும் ஏலக்காய் காரம், மணம், மருத்துவ குணத்தில் மிகச்சிறந்ததாக உள்ளது. இதனால் இவற்றின் விற்பனை விலை அதிகமாக உள்ளது. அத்துடன் ஏலக்காய் விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் நிலை நம் நாட்டில் உள்ளது. ஆனால் கவுதிமாலாவில் மானாவாரியாக ஏலக்காய் அதிக அளவில் விளைகிறது.

இதனால் இந்திய விலையுடன் ஒப்பிடும் நிலையில் அது மிக குறைவாக கிடைக்கிறது. மேலும் நம் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் ஏலக்காயில் பூச்சி மருந்துகளின் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறி அவற்றை கொள்முதல் செய்ய சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால் பூச்சி மருந்து தாக்கம் இல்லாமலும் விலை குறைவாகவும் கிடைப்பதால் கவுதிமாலா ஏலக்காய்களை அவர்கள் அதிகம் கொள்முதல் செய்கின்றனர்.

சர்வதேச மார்க்கெட்டில் மணம், தரம், அளவு, மருத்துவ குணத்தில் உயர்ந்ததாக உள்ள இந்திய ஏலக்காய் பிற நாட்டு ஏலக்காய்களை பின்னுக்கு தள்ளிவிடும். இவை உணவுப் பொருட்கள், பானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் விலை குறைவு என்பதால் இந்திய ஏலக்காய்க்கு கவுதிமாலா நாட்டு ஏலக்காய் மட்டுமே மிகப்பெரும் போட்டியாக இருக்கிறது. இந்த ஆண்டிலும் கவுதிமாலாவில் 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக ஏலக்காய் உற்பத்தியாகி இருப்பதாக தெரியவருகிறது. சவுதி அரேபியா உள்பட பல நாடுகளும் அவற்றை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளன.

இதற்கிடையே தற்போது ரூ.800க்கு விற்பனையான ஒரு கிலோ பல்க் ஏலக்காய் கடந்த ஒரு வாரமாக 1000 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் இதன் விலை ரூ.1,300 வரையில் அதிகரிக்கும் என்பதால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இருப்பினும் மொத்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கவுதிமாலா தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது.

அங்கிருந்து 40 ஆயிரம் டன் வரை ஏலக்காய் கொள்முதல் செய்ய பல நாடுகளும் ஆர்டர் கொடுத்துள்ளன. இதனால் இந்திய ஏலக்காய் ஏற்றுமதியில் சிக்கல் ஏற்படும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய ஏலக்காய்க்கு ஏற்றுமதி குறையும் என்ற தகவல் தெரியவந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சற்று கவலையடைந்துள்ளனர்.

Tags : Amoka ,Kautimala , Bodi: Gulf countries including Saudi Arabia have placed orders to purchase large quantities of cardamom from Guatemala.
× RELATED பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட...