தனியார் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்: தாரை, தப்பட்டை முழங்க நடனமாடி அசத்திய மாணவிகள்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தனியார் கல்லூரி மாணவிகள் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அன்னக்காவூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 500க்கும் மேற்பட்ட மாணவிகள் புத்தாடைகள் அணிந்துகொண்டு தாரை, தப்பட்டை அடித்தபடி நடனமாடி மகிழ்ந்தனர்.

தமிழர் கலாச்சாரமான நடனங்களை அவர்கள் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர். அதை தொடர்ந்து சமத்துவ பொங்கலிட்டு பொங்கல் பானையில் பால் பொங்கிவரும் வேலையில் மாணவிகள் ஒன்று சேர்ந்து குலவை சத்தம் எழுப்பி பொங்கலோ பொங்கல் என கூறி மகிழ்ந்தனர். அதை தொடர்ந்து மாணவிகளுக்காக கயிறு இழுத்தல், உறியடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டும், பரிசு பொருள்களும் வழங்கப்பட்டன.

Related Stories: