இந்தோனேஷியாவில் நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.7-ஆக பதிவு

தனிம்பர்: இந்தோனேசியாவின் துல் பிராந்தியத்தின் தென்மேற்கே 342 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனிம்பர் பகுதியில் நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தை ஆஸ்திரேலியா, திமோர்-லெஸ்தே மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட 14 மில்லியன் மக்கள் உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதையடுத்து இந்தோனேசியா அரசு, சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் நாட்களில் நில அதிர்வுகள் வரக்கூடும் என்று மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தான பகுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தி உள்ளது. நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவ்வித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: