×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.85 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு-எம்பி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக, அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பத்தினர் மற்றும் இலங்கை தமிழர் குடும்ப மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ₹1,000 ரொக்கம் ஆகியவற்றை தமிழக அரசு வழங்குகிறது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை நேற்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை  நகராட்சிக்கு உட்பட்ட கார்கானா தெருவில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை நேற்று எம்பி சி.என்.அண்ணாதுரை தொடங்கி வைத்தார். அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், துணைத்தலைவர் சு.ராஜாங்கம், கவுன்சிலர்கள் இந்து புகழேந்தி, இர.சீனுவாசன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை புதுவாணியங்குள தெருவில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை, டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில், மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார். அதில், நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று 1,643 ரேஷன் கடைகள் மூலம், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 85 ஆயிரத்து 966 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளன.

ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க, நாளொன்றுக்கு 200 ரேஷன் கார்டுகள் வீதம் பொருட்கள் வழங்க, ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பொதுமக்கள் நேரில் வந்து பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுளளது.கலசபாக்கம்: கலசபாக்கம் தாலுகாவில் 39,224 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதேபோல், துரிஞ்சாபுரம் அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் எம்பி சி.என்.அண்ணாதுரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கினார்.

செய்யாறு: செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் எம்எல்ஏ ஒ.ஜோதி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1,000த்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதில், ஒன்றியக்குழு தலைவர் டி.ராஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், செய்யாறு நகராட்சி 11வது வார்டில் உள்ள ரேஷன் கடையில் நகர மன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார். சின்ன தெரு அமுதம் கூட்டுறவு அங்காடியில் கவுன்சிலர் மகாலட்சுமி தலைமையில், மாவட்ட தர கட்டுப்பாட்டு அலுவலர் அரங்கநாதன் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார்.

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் பொங்கல் பரிசுப்தொகுப்பை வழங்கினார். அதேபோல், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோ.சரவணன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கினார்.

செங்கம்: செங்கம் ஒன்றியம், செ.சொர்ப்பனந்தல், பாச்சல், கோளாப்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1,000த்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பை ஒன்றிய செயலாளர் மு.செந்தில்குமார் வழங்கி தொடங்கி வைத்தார்.சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் இரா.முருகன் ஆகியோர் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தனர்.

இதேபோல், சேத்துப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், வங்கி தலைவர் ராதாகிருஷ்ணன், தச்சம்பாடி கூட்டுறவு வங்கியில் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், தேவிகாபுரம் கூட்டுறவு வங்கியில் முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம் ஆகியோர் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தனர்.

Tags : Pongal ,Tiruvannamalai district , Thiruvannamalai: To celebrate Pongal, the Tamil festival, all the ration card holders will receive rice.
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா