×

சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ளுங்கள்!: அரசாங்க முடிவை அமல்படுத்துவதே அதிகாரியின் கடமை.. குடிமைப்பணி தேர்வை எதிர்கொள்வோருடன் ஆளுநர் பேச்சு..!!

சென்னை: சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணி நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 பேருடன் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். எண்ணித் துணிக என்ற கலந்துரையாடலில் பேசிய அவர், கேள்விகளுக்கு அவசரமாக பதில் அளிக்க வேண்டாம்; நிதானமாக பதில் அளியுங்கள். நீங்கள் மற்றவர்கள் கருத்தைக் கேட்கலாம்; ஆனால் உண்மையை சொல்ல வேண்டும். குடிமைப் பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு பர்சனாலிட்டி மிக முக்கியம் என அறிவுரை வழங்கினார்.

அரசாங்க முடிவை அமல்படுத்துவதே அதிகாரியின் கடமை:

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கும்போது, ஒன்றிய அரசின் கருத்துப்படியே நடக்க வேண்டும். அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை அமல்படுத்துவதே இந்திய குடிமைப் பணி அதிகாரியின் கடமை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை. ஒரு விஷயத்தை பற்றி ஒரு பிரபலம் கருத்து கூறுகிறார் என்றால் அது உண்மையாக இருந்து விடமுடியாது என்றார்.

அதிகாரிகள் உண்மையின் அடிப்படையில் செயல்பட வேண்டும்:

அதிகாரிகள் உண்மையின் அடிப்படையிலும், ஆதாரங்களின் படியுமே செயல்பட வேண்டும். ஒன்றிய அரசு பணிகளுக்கு அதிகாரிகள் தான் தேவை, மனித உரிமை ஆர்வலர்களோ, தனி மனித சுதந்திரம் பேசுபவர்களோ தேவையில்லை எனவும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.

இந்திய குடிமைப்பணி அதிகாரிகளின் பணி: ஆளுநர் பதில்

இந்திய குடிமைப்பணி அதிகாரிகள் ஒன்றிய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ஒன்றிய அரசு மூலம் மத்திய அரசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்திய குடிமைப்பணி அதிகாரிகள். இறுதி முடிவு என்பது கருத்துக்கு எதிராக இருந்தாலும் அதை அமல்படுத்துவது என் கடமை என ஆளுநர் கூறினார்.

இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை:

இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை என ஆளுநர் ரவி பேசினார். எந்த மொழியும் கற்பது தவறில்லை; அது அந்த மக்களுடன் இணைந்து பணியாற்ற உதவும். இந்தியாவில் அதிக மக்கள் இந்தி பேசுவதால் இந்தி கற்றுக்கொள்வது பயன்படும் என ரவி தெரிவித்தார்.

Tags : Governor , Government Decision, Duty of Officer, Civil Service Exam, Governor
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...