கடந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர், இந்தாண்டு தமிழக ஆளுநர்: மோதலை உருவாக்கும் ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழ்

சென்னை: வரும் 12-ம் தேதி ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ஆளுநர் மாளிகையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் மாலை 5 மணியளவில் ஒரு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிடப்பட்டு ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாகவும், தமிழ்நாடு அரசு, திராவிட மாடல், மற்றும் அரசின் பாராட்டுக்கள் போன்ற அனைத்ததும் அவரது ஒப்புதலுடனே அச்சிடப்பட்டே ஆளுநரிடம் வழங்கப்படும். அதனை ஆளுநர் உரையில் அவர் வாசிப்பார். ஆனால் நேற்றுஅது அனைத்தயுமே அவர் வாசிக்காமல் விட்டுவிட்டு வேறு சிலவற்றை அவர் கூறியிருப்பார்.

இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ஆளுநர் உரையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என்ன அச்சிடப்பட்டிருக்கிறதோ அவை தான் அவை குறிப்பில் இருக்கவேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக ஆளுநர் தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித விளக்கமும் கொடுக்கப்படாத நிலையில், அடுத்த கட்ட சர்ச்சையாக பொங்கல் பண்டிகைக்கு அனுப்பியிருக்க கூடிய அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதை பயன்படுத்ததாலும் தமிழ்நாடு அரசின் இலட்சினையை பயன்படுத்தாமலும் இருப்பது ஆளுநர் மீண்டும் ஒரு மோதல் போக்கை தொடங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

Related Stories: