×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.41,896-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.41,896-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

தங்கம் விலை கடந்தவாரம் குறைந்திருந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.42,080-க்கு விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது. இன்று நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.41,896க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ரூ.5,237க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ.73.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நேரத்தில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Chennai ,Sawana , CHENNAI, GOLD, PRICE, FOR SAVANAR, DOWN, SALE
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...