ஸ்பெயினில் பார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி: இலக்கை துரத்தி தண்ணீரில் சீறிப்பாய்ந்த படகுகள்..!!

ஸ்பெயின்: ஸ்பெயினில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தி ஓஷன் ரேஸ் எப்போதுமே திறந்த கடல்களைக் கடக்கும் சிலிர்ப்பு மற்றும் திறமையைப் பற்றி அதிகம் பேசுகிறது என்றாலும், இன்-போர்ட் ரேஸ் தொடர் நீண்ட காலமாக பிரபலமானது மற்றும் பந்தயத்தின் டிஎன்ஏவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அலிகாண்டே பகுதியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஓசான் லைவ் பார்க்யில் நடைபெற்ற பாய்மர படகு போட்டியை காண 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

போட்டி தொடங்கியதும் இலக்கை துரத்தி தண்ணீரில் படகுகள் சீறிப்பாய பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். இன்-போர்ட் பந்தயங்கள் ஒரு அணியின் ஒட்டுமொத்த புள்ளிகளின் மதிப்பெண்ணாக எண்ணப்படாவிட்டாலும், அவை ஒட்டுமொத்த தரவரிசையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இரண்டு பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த மலிசியா குழு முதல் பரிசை தட்டி சென்றது. இதே போல் மற்றொரு போட்டியில் விண்ட் விஷ்வர் குழு வெற்றிபெற்றது.  

Related Stories: