×

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் விவாகாரம் தொடர்பாக எடப்பாடி தரப்பினர் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அப்பாவுவை சந்தித்துவருகின்றனர்.

எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். எதிர்கட்சி துணைதலைவர் இருக்கைகளை மாற்றியமைக்கவேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை இருக்கை விவகாரம் தொடர்பாக பரிசீலனை செய்வதாக, சபாநாயகர் தெரிவித்துள்ளதாக அதிமுக எம்எல்ஏக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Edappadi Party ,Tamil ,Nadu Legislation Opposition ,Deputy Leader ,l. PA ,Speaker , Tamil Nadu Legislative Assembly, Opposition Vice President seat, Edappadi side MLA meeting with Speaker
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு