×

ஜல்லிக்கட்டுக்கு இன்று முதல் மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்

மதுரை: ஜல்லிக்கட்டு இன்று முதல் மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் பெயர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு செய்யலாம்.  இதில் முக்கியமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுகான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மாடுபிடி வீரர்கள் கொரோனா தடுப்பூசி சான்று, வயது சான்று, போட்டோ ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கும் முன்பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.

காளையுடன் இருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றும், இருவரும் இரு தவணை கொரோனா சான்று பதிவேற்றவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று நண்பகல் 12 மணி முதல் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும்  madurai.nic.in இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Jallikattu ,Modupidi , Cowherd players can book their names online for Jallikattu from today
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...